சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில், சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் பங்குபெறும் கழகச் செயல்வீரர்கள் கூட்டம், 10-06-2023 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், சேலம், ஐந்து ரோடு, ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடைபெறும்.
அதுபோது சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.