சென்னை: திமுக முப்பெரும் விழாவை ஒட்டி பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருது தமிழ்தாசனுக்கு வழங்கப்பட உள்ளது. பேராசிரியர் விருது வி.பி.ராஜனுக்கு வழங்கப்பட உள்ளது.