கூடுவாஞ்சேரி: நெடுங்குன்றம் ஊராட்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட சதானந்தபுரத்தில் நடந்தது. இதில், வடக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆராமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், ஓட்டேரி குணா, மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பிரிவு துணை அமைப்பாளர் மெய்யழகன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சத்யநாராயணன், நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதாசீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், நெடுங்குன்றம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் நேதாஜி ஆகியோர் கலந்துகொண்டு கலைஞரின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.