மதுராந்தகம், : நெற்குணம் ஊராட்சியில் நடந்த, நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பாமக கட்சியின் ஊராட்சி மன்ற பெண் தலைவர், சுந்தர் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சித்தாமூர் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா, அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் கூட்டம் நெற்குணம் ஊராட்சியில் நேற்று முன்தினம் மாலை ஒன்றிய அமைப்பாளர் லோகநாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார்.
இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மாரிமுத்து, ராமமூர்த்தி, வடிவேல் முருகன், பழனி, சத்தியசீலன், சூரியகுமார், ஒன்றிய நிர்வாகிகள் வெங்கட கிருஷ்ணா, வெங்கடகிருஷ்ணன், தனசேகரன், நாகப்பன், குமுதா மதுரை, செல்வம், வேதாசலம், ஜெய கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல் மாலிக், தலைமைக் கழக பேச்சாளர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதனை தொடர்ந்து, பாமக கட்சியைச் சேர்ந்த நெற்குணம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி ராமலிங்கம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், ‘நாடு போற்றும் பல்வேறு திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை, நம்மைக் காக்கும்48, கலைஞர் கனவு இல்லம், நான் முதல்வன், தமிழ் புதல்வன், மக்களுடன் முதல்வர், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி நான்கு ஆண்டுகளில் சொன்னதையும் சொல்லாததையும் செய்து கொடுத்த முதல்வர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய பாஜ அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை.
இருப்பினும் தமிழக மக்களுக்காகவும் தமிழிற்காகவும் பாடுபட்டு முதல்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கியுள்ளார். தொழில் வளர்ச்சியிலும் கல்வி வளர்ச்சியிலும் முதல் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிடம் மாடல் அரசின் கொள்கையுடன் இந்த ஆட்சி நடைபெறுகிறது. இந்தத் திட்டங்கள் உங்களுக்கு தொடர வேண்டும் என்றால் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றம் தேர்தலில் 234க்கு 234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
மாவட்ட அமைப்பாளர் யுவராஜ், ஒன்றிய செயலாளர் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் புருஷோத்தமன், மாவட்டத் துணை அமைப்பாளர் ஆண்டோ, யுவராஜ், பால்ராஜ், உள்ளிட்ட கிளை செயலாளர்கள் இளைஞர்கள் பெண்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் இறுதியாக கிளைக் கழக இளைஞரணி பிரவீன் நன்றி கூறினார்.