புதுக்கோட்டை: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: திமுகவில் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. சென்ற இடங்களில் எல்லாம் திமுக தோழர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர். 7வது முறையாக திமுகதான் ஆட்சி அமைக்கும். மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார். அரசு சார்பில் செய்ய வேண்டிய பணிகளை செய்து முடிப்போம்.
எதிர்க்கட்சிகள் ஆரம்பத்திலிருந்து திமுகவையும், திமுக தலைவரையும் விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதை தாண்டிதான் தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் வரும் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். பொதுமக்கள் முழுமையாக முதல்வருக்கு தான் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். என்னிடம் 41 தொகுதிகளுக்கு பொறுப்பு கொடுத்துள்ளனர். அனைத்து தொகுதிகளும் திமுகவுக்கு சாதகமாகதான் உள்ளது.