சென்னை: திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை ஜூன்20ம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். கலைஞர் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் செய்துள்ளனர். வரும் ஜூன் 3 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 3 வரை கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.