ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூர் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் திமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் தேரடி சாலையில் நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார், துணை தலைவர் இந்திராணி சுப்பிரமணி, அவை தலைவர் வேணுகோபால், துணை செயலாளர்கள் குமார், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தலைமை கழக பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ் கலந்துகொண்டு, திமுக அரசின் இரண்டாண்டு கால சாதனைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் பொருளாளர் குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் காத்தவராயன், சம்பத், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், துணை அமைப்பாளர் சீனிவாசன், மாணவரணி அமைப்பாளர் சதீஷ், துணை அமைப்பாளர் லோகேஷ், திமுகவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.