ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக செயற்குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவலூர்குப்பம் கோபால் தலைமை வகித்தார். அவைத் தலைவர் மோகன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் குன்னம் முருகன், வளர்புரம் ஜார்ஜ் வல்லக்கோட்டை செந்தில் தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், ஒன்றிய நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பரமசிவன், வெள்ளாரை ஹரிகிருஷ்ணன், சுபவரஞ்சனி கன்னியப்பன், சர்தார் பாஷா, விநாயகமூர்த்தி, வல்லக்கோட்டை முருகன், கிளாய் மோகன், ஒன்றிய இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, கிளைக்கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.