Tuesday, March 5, 2024
Home » திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணத்தில் மாற்றம்

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணத்தில் மாற்றம்

by Karthik Yash

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, துணை பொதுச் செய­லா­ளர் கனி­மொழி எம்பி தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு தமிழ்நாடு முழுவதும் பயணித்து பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கருத்து கேட்டு வருகிறது. அந்த கருத்துக்களை பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளது. டி.கே.எஸ்.இளங்­கோ­வன், தமிழ்நாடு தக­வல் தொழில் நுட்பத்துறை அமைச்­சர் பி.டி.ஆர். பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன், தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எல்.ஏக்கள் சி.வி.எம்.பி.எழி­ல­ர­சன், கோ.வி.செழியன், எழி­லன், எம்பிக்கள் அப்­துல்லா, ராஜேஸ்­கு­மார், சென்னை மேயர் பிரியா ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு கடந்த 5ம் தேதி தூத்துக்குடியில் கருத்துக் கேட்பு பயணத்தை தொடங்கியது. நேற்று மதுரை பாண்டிகோயில் அருகே தனியார் திருமண மண்டபத்தில் கனிமொழி தலைமையில் குழு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. இந்நிலையில் குழுவின் சுற்றுப்பயணத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று தஞ்சை-திருவாரூர், நாகை-திருவாரூர், திருச்சி-புதுக்கோட்டை மாவட்டங்களின் நிர்வாகிகளை சந்திப்பதாக இருந்தது. ஆனால் இப்போது தஞ்சாவூர் மாவட்டத்துக்கு செல்வது 16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 9ம் தேதி சேலத்துக்கு பதில் ஓசூர் செல்கிறார்கள். 10ம் தேதி கோவை, திருப்பூருக்கும், 11ம் தேதி சேலம் செல்லும் வகையிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி விழுப்புரம், 18ம் தேதி வேலூர், ஆரணிக்கு செல்லும் குழுவினர் 21, 22, 23ம் தேதிகளில் சென்னையில் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்க உள்ளனர்.

You may also like

Leave a Comment

7 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi