சென்னை: தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 10ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட கழக செயலாளர் அனைவரும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.