தண்டையார்பேட்டை: புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் ஜெயசீலன் (31), பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் பிடியிலிருந்து தப்பி தலைமறைவாக குற்றச்செயலில் ஈடுபட்டு வந்தார். இவரை சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த 2016ல் விழுப்புரம் திமுக நகர செயலாளராக இருந்த செல்வராஜை (பொன்முடியின் பி.ஏ.வாகவும் இருந்தவர்) கொலை செய்த வழக்கு, 2023ல் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் நடந்த கொலை உள்ளிட்ட 15 வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளதும், தலைமறைவாக இருந்தபடியே தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. பிறகு கைது செய்யப்பட்ட ஜெயசீலனை தனிப்படை போலீசார் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.