திருத்தணி: திருத்தணியில் நகர திமுக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி திண்ணை பிரசாரக் கூட்டங்கள் நேற்று முன்தினம் நடந்தன. பழைய தர்மராஜா கோயில் அருகில் சதாசிவன் குளக்கரையிலும், கமலா திரையரங்கம் அருகிலும் நடைபெற்ற இந்த திண்ணை பிரசாரக் கூட்டங்களை நகர செயலாளர் வினோத்குமார் தலைமை தாங்கி ஏற்பாடு செய்திருந்தார். இதில் திமுக தலைமை பேச்சாளர் சேலம் சுஜாதா கலந்து கொண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், முன்னாள் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான பூபதி, திருத்தணி நகராட்சி துணைத் தலைவர் சாமிராஜ், முருகன் கோயில் அறங்காவலர் நாகன், நகர நிர்வாகிகள் கணேசன், விஜயா கஜேந்திரன், கவுன்சிலர்கள் நாகராஜ், மேஸ்திரி சண்முகவள்ளி, ஆறுமுகம், லோகநாதன், அப்துல்லா, பிரசாத், ரேவதி சுரேஷ், மஸ்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.