Tuesday, April 23, 2024
Home » திமுக கூட்டணியில்தான் விசிக இருக்கும்: திருமாவளவன் பேட்டி

திமுக கூட்டணியில்தான் விசிக இருக்கும்: திருமாவளவன் பேட்டி

by Karthik Yash

சென்னை: சென்னை, அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது. பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டி: நேற்று 12 மணியளவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் உயர்நிலைக் குழு கூட்டம் முடிவதற்கு தாமதம் ஆகும் என்பதால் திமுக குழுவில் முக்கிய தலைவரை தொடர்பு கொண்டு உயர்நிலைக் குழு கூட்டம் நிறைவு செய்ய நேரமாகும். ஆகவே இன்றைக்கு வர இயலாமைக்கு வருந்துகிறோம் என்று தகவல் தெரிவித்துள்ளோம். ஓரிரு நாளில் மீண்டும் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம். 2 தனி தொகுதி, 1 பொதுத் தொகுதி என 3 தொகுதிகளை கேட்டு பெறுவது நலம் பயக்கும் என்று உயர்நிலைக் குழுவில் கருத்துக்கள் பகிரப்பட்டது. திமுக கூட்டணியில் கொள்கை புரிதலோடு இயங்கிக் கொண்டிருக்கிற கட்சிகள் தான் உள்ளது. இந்த கூட்டணியில் எந்த குழப்பமோ, அவசரமோ, பதற்றமோ கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலை திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் தான் விசிக பயணிக்கும் என்றார்.

You may also like

Leave a Comment

5 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi