சென்னை: திமுக தலைமையிலான கூட்டணி மிகச் சரியான கூட்டணி என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தற்போதைய கூட்டணியை என்றைக்கும் எங்கள் தலைவர் விட்டுக்கொடுக்க மாட்டார். லால்குடியில் நான் பேசியதை சிலர் திரித்து வெளியிட்டுள்ளனர். இந்த ஆட்சி அடுத்த முறையும் தொடர எந்த நிலை வந்தாலும் பாடுபடுவோம் என்று பேசியிருந்தேன் என்றும் விளக்கம் அளித்தார்.