Sunday, March 3, 2024
Home » திமுக, அதிமுக, பாஜ யார் கூப்பிட்டாலும் தேமுதிக பேச்சுக்கு தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

திமுக, அதிமுக, பாஜ யார் கூப்பிட்டாலும் தேமுதிக பேச்சுக்கு தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

by Ranjith

தேமுதிக கொடி நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று கொடியேற்றி வைத்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாம் என்பதும், 14 சீட்டுகள் கொடுத்து மரியாதையுடன் வழி நடத்துபவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்பதும் மாவட்ட செயலாளர்களின் கருத்து. மீண்டும் அடுத்த ஆலோசனை கூட்டம் நடந்து, இறுதி முடிவு எடுத்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்பொழுது வருகிறதோ அதுதான் உண்மையான அறிவிப்பு.

அனைத்து கட்சிகளும் எங்களுடன் நட்புறவுடன்தான் இருக்கிறார்கள். தேர்தலுக்கான அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. கூட்டணிக்கு தலைமை ஏற்று இருப்பவர்கள் தான் இதற்கான துவக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அதிமுக கூட்டணியோ, திமுக கூட்டணியோ, பாஜ கூட்டணியோ, கூட்டணிக்கு தலைமை ஏற்று இருப்பவர்கள் இதற்கான தொடக்கத்தை தொடங்கினால் எங்கள் குழு பேசி நிச்சயமாக இறுதி நிலைப்பாடை உங்களுக்கு தெரிவிப்போம்.

அனைத்து கட்சிகளிடமும் ராஜ்யசபா எம்பிக்கள் இருக்கிறார்கள். அப்பொழுது தேமுதிக சீட்டு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்றார். ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறியது குறித்து, ‘‘இது உண்மையில் வருந்தத்தக்க விஷயம். ஆளுநரும் அரசும் நகமும் சதையுமாக இருக்க வேண்டும். இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடக்காத விஷயங்கள் இன்று சட்டசபையில் நடந்துள்ளது. இது தமிழ் மக்களாகிய நமக்கு ஏற்பட்ட தலைகுனிவாக பார்க்கிறேன்’’ என்றார்.

You may also like

Leave a Comment

14 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi