ஸ்ரீபெரும்புதூர்: போந்தூர் ஊராட்சியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் எச்சூர், வல்லக்கோட்டை, போந்தூர், பிள்ளைபாக்கம், தண்டலம், வளர்புரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் குண்ணம் முருகன், வளர்புரம் ஜார்ஜ், செந்தில்தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் உமாகாந்த் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் படிவம் வழங்கினார். மேலும், பூத்கமிட்டி நிர்வாகிகளிடம் தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் கணேஷ்பாபு, ஸ்ரீபெரும்புதூர் பேரூர் செயலாளர் சதிஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் பரமசிவன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆதித்யா முருகன், ஒன்றிய துணை அமைப்பாளர் தண்டலம் மனோஜ், கட்சி நிர்வாகிகள் போந்தூர் சரவணன், குண்டுபெரும்பேடு சங்கர், வல்லக்கோட்டை முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.