மண்டபம், ஏப்.20: மண்டபம் மத்திய ஒன்றியம் பனைக்குளம் திமுக கிளை சார்பில் புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடந்தது. பனைக்குளம் ஊராட்சி தலைவர் பவுசியா பானு தலைமை வகித்தார். கிளை செயலாளர் ஜஹாங்கீர் அலி முன்னிலை வகித்தார். மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், திருவாடானை தொகுதி திமுக பொறுப்பாளர் முத்து ராமலிங்கம், திமுக மூத்த நிர்வாகிகள் ஜெய்ன்ஷர், ஒன்றிய பிரதிநிதி நூருல் மன்னன், கிளை தலைவர் சாகுல் ஹமீது, புக்கிட் ஜலீல், உட்பட பலர் கலந்து கொண்டனர்
திமுக உறுப்பினர் சேர்ப்பு முகாம்
previous post