நெல்லை: நெல்லை மேலப்பாளையம் அருகே கீழ முன்னீர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வசங்கர் (45), பாளை., தெற்கு ஒன்றிய திமுக பொருளாளராக உள்ளார். செல்வசங்கர் மனைவி சரஸ்வதி, பாளையங்கோட்டை ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு செல்வசங்கர், வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்த போது, அவரது வீட்டின் முன் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கிவிட்டு தப்பினர். இதேபோல் நெல்லை டவுன் ஆர்ச் அருகேயுள்ள நெல்லை கண்ணன் சாலையில் ஒரு பைக் ஷோரூம் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது.
அதேபோல் நாங்குநேரி அருகே தளபதிசமுத்திரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் இரவு ஒரே பைக்கில் வந்த 4 பேர் பெட்ரோல் பங்கி ஊழியர் மணி (23) என்பவரை மிரட்டி ரூ.20 ஆயிரத்தை பறித்துச் சென்று உள்ளனர். மூன்று சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே நபர்கள் என்று தெரியவந்து உள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.