Tuesday, April 16, 2024
Home » திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி, தேர்தல் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினார்

திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி, தேர்தல் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினார்

by MuthuKumar

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திமுக வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கையை ஒரே நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி, தேர்தல் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினார்.

இதற்கு முன்னதாக கனிமொழி பேசியதாவது:
திராவிட முன்னேற்ற கழகத்தில் தேர்தல் அறிக்கை என்பது தேர்தலின் மிக முக்கிய அங்கமாக எப்போதும் இருந்துள்ளது. தலைவர் கலைஞர் தொட்டு ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களை சந்தித்து, தேர்தல் அறிக்கை என்பது மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்று அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.

இன்று அண்ணன் தளபதி நாடாளுமன்ற தேர்தலுக்காக பாரம்பரியம் இருக்க கூடிய தேர்தல் அறிக்கையை உருவாக்க கூடிய பொறுப்பை, அந்த குழுவின் தலைமையை என்னிடம் ஒப்படைத்ததற்குகாக வருக்கு எண்ணுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தொடர்ந்து பெறுமையாக சொல்லக்கூடிய திராவிட மாடல் ஆட்சி. அந்த திராவிட மாடல் ஆட்சியின் நாயகனாக இருக்க கூடிய நம்முடைய முதலமைச்சர், நம்முடைய பெரியவர்கள் பெரிய பெரிய விசியங்களை, செயற்கரிய செயல்களை செய்வார்கள் என்று நாம் எப்போதும் செல்லுவோம். இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் போது தான் நம்முடைய முதலமைச்சரின் ஆட்சி, இந்த குறுகிய காலத்திற்குள் எத்தனை சாதனைகளை செய்துள்ளது என்பதை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருந்தது. தேர்தல் அறிக்கையில் நம்முடைய சாதனைகளை போட்டால் அதற்கே சரியாகிவிடும் என்பதால் பல சாதனைகளை குறைக்க வேண்டியிருந்த அவசியத்தையும் நாங்கள் பார்த்தோம்.

ஒவ்வொருவரையும் தொடக்கூடிய ஆட்சியாக, தமிழ்நாட்டில் இருக்ககூடிய அத்தனை பேரின் வாழ்க்கையையும் மாற்றக்கூடிய ஆட்சியாக நம்முடைய முதலமைச்சரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த ஆட்சியில் இந்த தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு, அடுத்து இந்த திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் நம்முடைய முதலமைச்சவர் கொண்டு செல்வதற்கு வரக்கூடிய தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை இந்த நாட்டில் உருவாக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த நாடு காத்திருக்கிறது. நிச்சையமாக வரக்கூடிய தேர்தலில் தமிழகத்தில் இருக்க கூடிய 40 மட்டுமல்ல இந்த நாடும் நமதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

4 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi