Saturday, April 13, 2024
Home » திமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து அதிமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து அதிமுக தேர்தல் அறிக்கை

by MuthuKumar

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த 20ம் தேதி திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதனை தொடர்ந்து நேற்று அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அறிவிப்புகளை போலவே 28 அறிவிப்புகளை அதிமுக காப்பி அடித்துள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது.

அவை வருமாறு:
*மகளிர் உரிமைத் தொகையாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்க ஒன்றிய அரசை அதிமுக வலியுறுத்தும்
*குடியுரிமை திருத்த சட்டத்தில் ஈழத் தமிழர்கள், முஸ்லிம்களை உட்படுத்த வலியுறுத்தல்
*ஆளுநர் பதவி நியமன முறை குறித்து கருத்து கேட்க வேண்டும்
*நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வலியுறுத்தல்
*குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் மாற்றத்தை கைவிட வலியுறுத்தல்
*உச்ச நீதிமன்றக் கிளை சென்னை அமைக்க வலியுறுத்தல்
*நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்
*சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்தப்படும்
*100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்க ஒன்றிய அரசை அதிமுக வலியுறுத்தும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
* ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை
*நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்
*கச்சத்தீவு மீட்பு திட்டம்
*இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு
*வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காத்திட நலவாரியம் அமைத்திட வலியுறுத்தல்
*கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம்
*மேகதாது அணைக்கட்டும் முயற்சிகள் தடுக்கப்படும்
*விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் மானியத் தொகை ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்
*மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கொண்டுவரப்படும், பிற மாவட்டங்களில் கொண்டுவரப்படும்
*நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்றுதல்
*தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் மெட்ரோ திட்டம்
*ரயில் சேவை கூடுதல் வழித்தடங்கள் அமைக்கப்படும்
*விமான நிலையம் அமைந்திட நடவடிக்கை எடுக்கப்படும்
*புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும்
*ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தம் செய்யப்படும்
*சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும்
*புதிய ஜவுளி வளாகம் அமைக்கப்படும்
*புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து
*நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

You may also like

Leave a Comment

13 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi