கரூர்: தே.மு.தி.க.வின் வாக்கு வங்கி குறையவில்லை என பிரேமலதா தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற அவர் கரூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்; தே.மு.தி.க. உடன் த.வெ.க. கூட்டணியா என்பது, விஜயிடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு ராஜ்ய சபா சீட் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது தான்.
2026ல் மாநிலங்களவை சீட் உறுதியாக தருவதாக இபிஸ் கூறியுள்ளார்; பொறுத்திருந்து பார்ப்போம். 2025ல் தருவதாக சொன்னதை 2026 என்று அறிவித்துள்ளார்கள் அவ்வளவுதான். 2026ல் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது தான். 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கியே எங்களது அரசியல் நகர்வு இருக்கும். 2026ம் ஆண்டு கூட்டணி ஆட்சி வந்தால் மிகவும் நல்லது, மக்களுக்கு ஏராளமான நல்லது செய்யலாம் என்று கூறினார்.