Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமை : பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

புதுக்கோட்டை : தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திமுக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.அதிமுக வேட்பாளர்களை முடிவு செய்வது தொடர்பாக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த நிலையில், அதிமுக உடன் கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், "அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம்; அதன்படி கமலுக்கு சீட் தரப்பட்டுள்ளது, அதை வரவேற்கிறோம். அதே போல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தையை நிரூபித்துக் காட்ட வேண்டும். தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. 2024 மக்களவைத் தேர்தல் பேச்சுவார்த்தையின்போதே ராஜ்யசபா சீட் தொடர்பாக முடிவு எட்டப்பட்டது. மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லையென்றால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்; பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள், நாங்கள் பதற்றமின்றி தெளிவாக உள்ளோம்,"இவ்வாறு தெரிவித்தார்.