சென்னை: வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதனால் பொது நிகழ்ச்சிகளில் பெரிதாகக் கலந்து கொள்வதில்லை.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைமை நேற்றுவெளியிட்ட அறிக்கையில், ‘‘தேமுதிக தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவமனை பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’’ என தெரிவித்துள்ளது.