சென்னை: கடந்த தேர்தலின் போது அதிமுக நம்மை மதிக்கவில்லை என தொகுதி வாரியாக நடைபெறும் தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதாவிடம் தேமுதிக நிர்வாகிகள் புகார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் இருந்த போது அதிமுகவினர் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. செலவுக்கு சரியாக பணம் கூட கொடுக்கவில்லை. எந்த கூட்டணிக்கு சென்றாலும் 40 தொகுதிகளை கேளுங்கள் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தலின் போது அதிமுக நம்மை மதிக்கவில்லை: தேமுதிக நிர்வாகிகள் புகார்
0