காரைக்கால், நவ.11: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரைக்காலில் உள்ள சுமார் 10 க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மற்றும் முதியோர் காப்பகத்திற்கு காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் மூலம் சுமார் 60 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகள், இனிப்புகள்,பட்டாசுகள் மற்றும் மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது. அந்தந்த ஆதரவற்றோர் மற்றும் முதியோர் நிலைய காப்பகத்தின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்களிடம் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் வளாக கட்டிடத்தில் வைத்து கொடுத்தன. இதில் காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் அறிவழகன், சாந்தகுமார், செயலாளர் துரை ராஜ் பாலாஜி, பொருளாளர் பக்காராம்,முன்னாள் பொருளாளர் பாலகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.