கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூபாய் 280 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.