சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் இதுவரை 19,854 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. SETC பேருந்துகளில் பயணம் செய்ய சென்னையில் இருந்து 7,856 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அக்.29 அன்று 10,542 டிக்கெட்டுகள், அக்.30 அன்று 9,402 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அக். 10, 12ல் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.