சென்னை: தீபாவளிக்கு பொருட்கள் வழங்க திறந்திருந்ததால் 2 நாட்கள் நியாய விலை கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள், உணவு பொருள் வழங்கல் துணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3-11-2023 (வெள்ளி) மற்றும் 10-11-2023 (வெள்ளி) ஆகிய 2 நாட்கள் நியாய விலை கடைகளுக்கு் பணி நாளாக அறிவிக்கப்பட்டது. அதற்கு ஈடாக 13-11-2023 (திங்கள்) மற்றும் 25-11-2023 (சனி) ஆகிய 2 நாள் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.