சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல தமிழகம் முழுவதும் இன்று 6,705 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக மொத்தம் 16,895 பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று மட்டும் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,365 சிறப்பு பேருந்துகளுடன் சேர்த்து 3,465 பேருந்துகள் இயக்கப்பட்டது, இன்றும் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,895 சிறப்பு பேருந்துகளுடன் சேர்த்து 3,995 பேருந்துகளும், அதே போல பிற ஊர்களில் இருந்து 2,710 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.