டெல்லி: தீபாவளியை ஒட்டி இந்தியா முழுவதும் ரூ.30,000 கோடி மதிப்புக்கு தங்கம், வெள்ளி விற்பனையாகி உள்ளதாக வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. 41 டன் தங்கம், 400 டன் வெள்ளி விற்பனையாகி உள்ளதாக வணிகர் கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தங்கம் விற்பனை 20% அதிகரிக்க வாய்ப்பு என நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.