சென்னை: தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு இரவு 8 மணி முதல் 10 மணிவரை கூடுதல் மெட்ரோ ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு வழித்தடங்களிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. 9 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு மெட்ரோ ரயில் என்பதற்கு பதிலாக 6 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும். பயணிகளின் கூட்ட நெரிசலை ஒட்டி இரவு நேரங்களில் 6 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நெரிசலைத் தவிர்க்க கூடுதல் மெட்ரோ ரயில் சேவை..!!
136