விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை போல தற்போது அங்கு செய்யப்படும் மற்ற பால் இனிப்பு வகைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது. தீபாவளியை ஒட்டி விற்பனையை அதிகரித்துள்ளதால் பால் இனிப்பு தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பிரபலமானது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா மட்டுமின்றி பல பால் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. பால்கோவாவில் சர்க்கரை சேர்க்காமல் பியூர் கோவா தயாரிக்கப்பட்டு அதை பயன்படுத்தி பல பால் வகை இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பால் இணைப்புகளுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே ஸ்ரீவில்லிபுத்தூரில் பியூர் கோவா மாற்று பால் இனிப்புகளுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. தீபாவளி நெருங்கும் நிலையில் இரவு, பகல் பாராமல் ஊழியர்கள் இனிப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு இனிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், வடமாநிலங்களில் பிரபலமான இனிப்புகளும் இங்கு தயாரிக்கப்படுவதால் தமிழ்நாட்டிலும் விற்பனை அதிகரித்துள்ளது.