சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனம் தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்யவுள்ளது. ரூ.300, ரூ.500, ரூ.900 ஆகிய 3 விலைகளில் தள்ளுபடி முறையில் ஆவின் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்யவுள்ளது. மைசூர்பாகு 250 கிராம், மிக்சர் 200கிராம், பிஸ்கட் 80கிராம் உள்ளிட்டவை ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெய் பாதுஷா 250கிராம், பாதாம் மிக்ஸ் 200கிராம், குலாப் ஜாமூன் 200கிராம் உள்ளிட்டவை ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.