சென்னை: பன்முகத்தன்மை கொண்டவர் கலைஞர் என தமிழக அமைச்சர் துரைமுருகன் புகழாரம் சூட்டினார். சென்னையில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் துரைமுருகன் வரவேற்புரை வழங்கினார். அரை நூற்றாண்டாக திமுக தலைவராக இருந்தவர் கலைஞர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் மாநில வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் கலைஞர். இது போன்ற சாதனையை வேறு யாரும் செய்ததில்லை என அமைச்சர் துரை முருகன் கூறினார்.