ராஜாக்கமங்கலம்: ஈத்தாமொழி அருகே பூவன்குடியிருப்பு – மணியன்விளை சாலையில் பேரூந்து நிறுத்த பயணிகள் நிழற்கூடம் உள்ளது.பஸ்சுக்கு காத்து நிற்கும் முதியோர், மாற்றுத்திறனாளி, மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள்,கர்ப்பிணிகள், தாய்மார்கள் மழை, வெயில் காலங்களில் இதில் ஒதுங்கி நின்று பஸ் ஏறி செல்கின்றனர்.இதனால் பயணிகளுக்கு பெரும் பயனாக உள்ளது. இந்நிலையில் கடந்த பல நாட்களாக அருகில் உள்ள டீக்கடைக்காரர் ஒருவர் கடைக்கு தேவையான விறகு போன்ற பொருட்களை நிழற்கூடத்தினுள் அடுக்கி வைத்துள்ளார்.
சில நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்தும் பாராக இந்த நிழற் கூடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மழை,வெயில் என்றாலும் வெளியில் காத்து நின்று தான் பஸ் ஏற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பயணிகள் நிழற்கூடத்தை தவறாக பயன்படுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.