சென்னை: மாவட்டங்களின் வளர்ச்சி வேளாண் சார்ந்தது மட்டுமின்றி, தொழில் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்டங்களின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். வேளாண் பொருட்கள் உற்பத்தியை பெருக்க உடனடி முயற்சிகள் தேவை. தென்னை மரங்களின் பரப்பை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.