Sunday, February 25, 2024
Home » ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வட்டார கல்வி அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வட்டார கல்வி அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

by Suresh
Published: Last Updated on

மதுரை: ஆரோக்கியமான சமுதாயம் உருவாக, வட்டார கல்வி அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நேரடி நியமன வட்டார கல்வி அலுவலருக்கான காலி பணியிடங்களுக்கு இணைய வழி தேர்வு கடந்த செப். 10ம் தேதி நடத்தப்பட்டது. இதில், தேர்வானோர் பட்டியல் நவ. 9ம் தேதி வெளியிடப்பட்டு, ஜன. 28ல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வான 33 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘வட்டார கல்வி அலுவலர்கள் நேரடியாக பணிக்கு வந்துள்ளீர்கள். அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுங்கள். இது ஒரு நல்ல வாய்ப்பாகும். அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் நீங்கள் முக்கிய இடத்தில் இருக்கிறீர்கள். களநிலவரம் உங்களுக்குத்தான் தெரியும். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, அர்ப்பணிப்போடு பணியாற்றுங்கள்’ என்றார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை செயலர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi