திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளியூர், அரும்பாக்கம், மேலானூர், பேரத்தூர், வதட்டூர், விளாப்பாக்கம், விஷ்ணுவாக்கம், கரிக்கலவாக்கம் ஆகிய ஊராட்சிகள் அடங்கிய மக்களுடன் முதல்வர் முகாம் வெள்ளியூரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கோட்டாட்சியர் கற்பகம் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் வாசுதேவன், ஒன்றிய திமுக செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பர்கத்துல்லா கான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ரவி, ஒன்றிய கவுன்சிலர் வேலு, ஊராட்சி தலைவர் பப்பி முனுசாமி, துணைத் தலைவர் முரளி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ஜெபக்குமாரி, இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் ஜோதி, மண்டல துணை வட்டாட்சியர் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர்கள் பொன்மலர், மார்கிரேட், திமுக ஒன்றிய துணை செயலாளர்கள் மனோகரன், மதுரைவீரன், புன்னை குமார், மாவட்ட துணை அமைப்பாளர் கபிலன்,
முன்னாள் ஊராட்சித் தலைவர் கலைச்செல்வி வெங்கடேசன், கிளை செயலாளர்கள் கஜா, கன்னியப்பன், அஜித், மூர்த்தி, யுவராணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் கற்பகம் தெரிவித்தார்.
இதேபோல் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர், தண்ணீர் குளம், புட்லூர் ஆகிய ஊராட்சிகள் அடங்கிய மக்களுடன் முதல்வர் முகாம் காக்களூரில் நடைபெற்றது. முகாமிற்கு வட்டாட்சியர் வாசுதேவன், ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான த.எத்திராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ரவி, ஒன்றிய கவுன்சிலர் பூவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். இதில் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர், கனகராஜ், உதவி செயற்பொறியாளர் ஜானகிராமன், உதவி பொறியாளர் பாலாஜி, மண்டல துணை வட்டாட்சியர் ஆதிலட்சுமி, வருவாய் ஆய்வாளர் மதன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுப்பிரமணி, அண்ணாமலை, மாலினி, ஆனந்தன், தேவராஜ், திமுக நிர்வாகிகள் சொக்கலிங்கம், தண்ணீர்குளம் தயாளன்,
மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் சவுந்தர்ராஜன், தண்ணீர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா தயாளன், சங்கர், பிரபு, சுகுமார், சதீஷ், விக்கி, கோவிந்தராஜ், ராமச்சந்திரன், தினேஷ், ஆறுமுகம், பாஸ்கர், ராஜி, கார்த்தி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். எல்லாபுரம் ஒன்றியம்: எல்லாபுரம் ஒன்றியம் லச்சிவாக்கம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஊத்துக்கோட்டை தாசில்தார் சதீஷ் தலைமை தாங்கினார்.
எல்லாபுரம் திமுக ஒன்றியச் செயலாளர் மூர்த்தி, பெரியபாளையம் பிடிஓக்கள் ராமகிருஷ்ணன், அற்புதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பொதுமக்கள் மனுக்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முகாமில், பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், ரவிக்குமார், பேரூர் செயலாளர் அபிராமி, பேரூராட்சி துணைத்தலைவர் குமரவேல், சங்கர், ஜெயலலிதா சசிதரன், ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன், வக்கில் சீனிவாசன், முனுசாமி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் 10 கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.
பெரியபாளையம் ஊராட்சி: பெரியபாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் ஊத்துக்கோட்டை தாசில்தார் சதீஷ் தலைமை தாங்கினார். முகாமில் ஆத்துப்பாக்கம், காக்கவாக்கம், குமரப்பேட்டை, பெரியபாளையம் தண்டலம், தொளவேடு, தும்பாக்கம், வண்ணாங்குப்பம் ஆகிய 8 ஊராட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க குவிந்தனர்.
காரனோடை ஊராட்சி: சோழவரம் அடுத்த காரனோடை ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சோழவரம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் கருணாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பொதுமக்களிடமிருந்து பல்வேறு திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய சான்றிதழ்களை வழங்கினார்.
இம்முகாமில் 17 அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் காரனோடை, பழைய எருமை வெட்டிபாளையம், புதிய எருமைவெட்டி பாளையம், ஆத்தூர், சோத்துபெரும்பேடு, நெற்குன்றம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை அளித்தனர். மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.