திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் இன்று தொடங்கியது. போட்டிகளை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் இன்று காலை தொடங்கியது. இதை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார். இதில் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே. கம்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டிகளில் 200மீ, 400மீ, 800மீ, 1200மீ, 5000 மீட்டர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், கம்பு ஊன்றி தாண்டுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்றவை நடைபெறுகிறது.
இதில் 14வயது முதல் 20வயதுக்குட்பட்ட 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். போட்டியின் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. இதில் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே. கம்பன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது. இந்த போட்டியில் தேர்வாகும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.