அவிநாசி, ஜூலை 15: அவிநாசி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட முதலாவது வார்டு பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உப்பு தண்ணீர் ஆழ்துளை கிணறு மூலமும் நல்ல தண்ணீர் (ஆற்றுக்குடிநீர்) குழாய் மூலமுமாகவும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக நல்ல தண்ணீர் (ஆற்றுக்குடிநீர்) குறித்த நாட்களில் வருவதில்லை. புது காலனியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் பழுது ஏற்பட்டுள்ளதன் காரணமாக முறையாக குடிநீர் வினியோகம் வழங்க இல்லாத சூழ்நிலை உள்ளது.
இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆழ்துளை கிணற்றை சரி செய்து முறையான குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும், சீரான குடிநீர் சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஊராட்சி தனி அலுவலரிடம் நேற்று மனு அளித்தனர். இதில், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி கிளைச்செயலாளர் ராஜேஷ், முன்னாள் வார்டு உறுப்பினர் ரங்கசாமி, சுப்பிரமணி, சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.