கந்தர்வகோட்டை- தஞ்சை சாலையில் உள்ள பாலங்களில் முன்னெச்சரிக்கை பலகை வைக்க வலிறுத்தல்
Advertisement
கந்தர்வகோட்டை,ஜூன் 15: கந்தர்வகோட்டை-தஞ்சை சாலையில் உள்ள பாலங்களில் இரவில் ஒளிரும் முன்னெச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலைகளில் அதிக அளவில் சிறுபாலங்கள் உள்ளது. இந்த பாலங்களில் இரவில் ஒளிரும் பலகை இல்லாமல் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், கனரக வாகன ஓட்டிகளும் அதிக அளவில் விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் அனைத்து பாலங்களிலும் இரவில் ஒளிரும் முன்னேற்றிக்கை பலகை வைக்க வேண்டும். சாலை ஓரங்களில் இரவில் ஒளிரும் வில்லைகளை பொருத்த வேண்டும் என கனரக வாகன ஓட்டிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement