Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அருள்மிகு கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 30: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் பரமசி கல்லூரியில் 2026-27 பேட்ச், டி.பார்ம், பி.பார்ம் மற்றும் பார்ம்-டி, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க விழா மற்றும் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன், செயலாளர் முனைவர் சசி ஆனந்த் மற்றும் இயக்குனர் அர்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் முகமது ஷேக் அரபாத் அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்வில் தலைமை விருந்தினர், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அமுதா ராணி கலந்து கொண்டு, மருந்தியல் தொழிலின் முக்கியத்துவம் மற்றும் சமுதாயத்திற்கு மருந்தாளுநர்கள் ஆற்றும் சேவைகள் குறித்து பேசினார். தொடர்ந்து சென்னை, லாகூன் ட்ரக்ஸ் நிறுவன பொது மேலாளர் சரவண முத்துகுமார், பேராசிரியர்கள் டாக்டர் தங்க திருப்பதி மற்றும் தேன்மொழி ஆகியோர் பேசினர். மேலும், இவ்விழாவில் பெற்றோர், பேராசியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக பேராசிரியர் முனைவர் ஜூலியன் திலிபன் நன்றி கூறினார்.