Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விபத்தை உருவாக்கும் ஆபத்தான பள்ளம்

விருதுநகர், அக். 30: விருதுநகர் புழுகனூரணி சாலை பகுதியிலிருந்து செல்லும் கழிவுநீர் மற்றும் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பெய்யக்கூடிய மழைநீர் வெளியேற வழி இல்லாததால் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி காணப்படும். இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வரக்கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தொற்று நோய் பரவும் அச்சத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இந்தப் பகுதியில் செல்லக்கூடிய கழிவுநீர் மற்றும் மழைநீரை எளிதாக கடத்தும் வகையில் பழைய பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் பகுதியில் அருகே புதிதாக கழிவுநீர் செல்வதற்கான வாறுகால் கட்டப்பட்டது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த நிலையில் இந்த புதிய வாறுகால் பாலத்தின் இருபுறமும் ஜல்லிக்கட்டு கொட்டி தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த பாலத்தின் இரண்டு புறமும் பெரும்பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே இந்த பள்ளத்தை மூடி விபத்தை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.