விருதுநகர், செப். 30: ஒன்றிய அரசு மக்களவையில் நிறைவேற்றிய ஓய்வூதிய நிதிச் சட்டம் 2025ஐ திரும்பப் பெற வலியுறுத்தி விருதுநகரில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் 24 மணி நேர தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மூட்டா அமைப்பின் தலைவர் பெரியசாமி ராஜா தொடங்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ராமசுப்புராஜ் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். மாநில செயலாளர் குருசாமி ஓய்வூதிய சட்ட திருத்த மசோதாவில் உள்ள பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தார். இந்த தொடர் போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஜெகதீசன் உட்பட ஓய்வூதியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement

