வில்லிபுத்தூர், செப்.30: வில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சீனிவாசப் பெருமாள் சன்னதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்து தரிசனம் செய்வர். இதன்படி கடந்த 26ம் தேதி புரட்டாசி 2வது சனிக்கிழமை தினத்தில் சுமார் 16 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கோயில் நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், கோயில் கண்காணிப்பாளர் அர்ஜூன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். உண்டியல்களை திறந்து எண்ணியதில் ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்து 139ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்த பணியில் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் ஈடுபட்டனர்.
+
Advertisement

