Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

சிவகாசி, ஜூன் 30: சிவகாசியில் ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு வாலிபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசியை சேர்ந்த 36 வயது பெண் தனியார் பட்டாசு கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று திருவேங்கடத்தில் இருந்து சிவகாசிக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பஸ்சில் வந்த திருவேங்கடத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் விமல்அலெக்ஸ், நாகராஜன் அந்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண் செல்போன் மூலம் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார். பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ் வந்ததும் மனைவியிடம் தகராறு செய்த இருவரையும் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இவரும் அந்த பெண்ணிடமும், அவரது கணவரிடமும் தகராறு செய்துள்ளனர். இது குறித்து அந்த பெண் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.