சிவகாசி, ஜூன் 30: சிவகாசியில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சிவகாசி பிச்சாண்டி தெருவில் கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கழிப்பிடத்தின் அருகில் அதே பகுதியை சேர்ந்த சேவுகன் மகன் சுந்தர்ராஜ் (21), ரஞ்ஜித்குமார் (32) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பாபு பாண்டியன் மகன் சேகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகாசி அருகே வடமலாபுரம் வாகன சோதனை சாவடி அருகில் திருத்தங்கல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் பைக்கை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த காரிச்சேரியை சேர்ந்த சரவணக் குமார்(21) என்பவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
