Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

ராஜபாளையம், அக். 29: ராஜபாளையம் தாட்கோ காலனியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி இந்திரா (55) வீட்டின் முன்பு ஒரு சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் சோதனையிட்டபோது சாக்கு பையை சோதனை செய்த போது, அதில் 14 கிலோ புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்திராவை போலீசார் கைது செய்து, 14 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.