Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பயன்பாட்டிற்கு வந்த ஆதார் மையம்

காரியாபட்டி, அக். 29: காரியாபட்டியில் அச்சம்பட்டி, நெடுங்குளம், பிச்சம்பட்டி, காமராஜர் காலனி மற்றும் பஜார் பகுதி மக்களின் தேவைக்காகப் பேரூராட்சி நிர்வாகம் தனது அலுவலக வளாகத்தில் இடவசதி வழங்கி ஆதார் மையம் அமைத்தது. ஆனால், இந்த அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த ஆதார் மையம் கடந்த 2 மாதங்களாக இயங்காமல் பூட்டிக்கிடந்தது.

இதனால், பேரூராட்சி அலுவலகத்திற்கு ஆதார் சேவைக்காக வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆதார் மைய மாவட்ட திட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.  இதனை யடுத்து மீண்டும் 2 மாதங்களுக்கு பிறகு ஆதார் மையம் செயல்பட தொடங்கியுள்ளது. இந்த ஆதார் மையத்தை பயன்படுத்திக் கொண்டு பலனடையுமாறு பேரூராட்சி தலைவர் செந்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.