Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்

விருதுநகர், அக். 29: விருதுநகரில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த தர்ணா ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமை வகித்தார்.

இதில் பழைய பென்ஷன் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்கள், தோட்டக்கலைத் துறையில் பணிபுரியும் பழ பண்ணை ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கி பண பலன்கள் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.